நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.



இப்படம் இப்போதும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது, மேலும் இப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தவசி.



இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், ரஜினிமுருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் இவர் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார், இதனால் முற்றிலும் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார்.



மேலும் சிகிச்சைக்காகவும் உதவியை நாடியுள்ளார் நடிகர் தவசி. இந்த நிலையில் பல்வேறு நடிகர்கள் இவருக்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top