கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானைக்குட்டி செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

தாய்லாந்து நாட்டில் சுமார் 2000 ஆயிரதிற்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. நமது ஊர்களை போலவே அவ்வப்போது வயல்களுக்குள் புகுந்துவிடும் யானைகள் அங்குள்ள சோளம், கரும்பு போன்றவற்றை தின்றுவிட்டு செல்லும் சம்பவங்களும் நடந்து விடும்.

 

இதற்காக யானைகள் வரவை தடுக்க இரவிலும் காவல் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் வடக்கு தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் ஏதோ சலசலப்பு கேட்டது அங்கிருந்த காவலர்கள் டார்ச் லைட்டை தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள்.கரும்பை சுவைக்க ஆசைப்பட்டு தனியாக வந்துள்ளது குட்டி யானை ஒன்று.

 

கரும்பு தோட்டத்திற்கு அது புகுந்திருந்த நிலையில் ஆட்கள் சிலர் டார்ச் லைட்டோடு வருவதை கண்டதும் பயந்து ஓடி ஒளிய முயற்சித்துள்ளது. உடனே அங்கிருந்த மின்கம்பம் ஒன்றின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டு அசையாமல் நின்று கொண்டது.

 

மின்கம்பத்தை விட பெரிதாக உள்ள யானைக்குட்டி மின்கம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சித்ததை அங்கு சென்ற காவலர்கள் போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

 


தற்போது உலகம் முழுக்க அந்த யானைக்குட்டியின் க்யூட்டான புகைப்படங்கள் வைரலாகி பல இதங்களை கவர்ந்து வருகிறது. யானைக்குட்டியின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top