நடிகை குஷ்பு சென்ற கார் டேங்கர் லொறி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேல்மருவத்தூர் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. பாஜகவை சேர்ந்த குஷ்பு சென்ற கார் மீது டேங்கர் லொறி மோதியுள்ளது.

 

குஷ்பு சென்னையில் இருந்து கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

குஷ்பு சென்னையில் இருந்து கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

விபத்தில் குஷ்பு லேசான காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து சேதமடைந்த காரின் புகைப்படத்துடன் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

அதில், மேல்மருவத்தூர் அருகே டேங்கர் லொறி நான் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. கடவுளின் ஆசியால் நான் நலமாக இருக்கிறேன். கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்கான எனது பயணம் தொடரும்.

 

விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகப்பெருமான் எங்களை காப்பாற்றி விட்டார். என் கணவர் அவர் மீது முருகப்பெருமான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பார்த்துவிட்டோம என குஷ்பு தெரிவித்துள்ளார்.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top