கொரோனா வைரஸ் தொற்று இருந்தும் எந்தவிதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத நபர்களே உலகில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக, அமெரிக்காவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த புதிய ஆய்வுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக முகக்கவசம் அணிவது மிக கட்டாயமானது என்று, அதன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் 19 உள்ளிட்ட அனைத்து கொரோனா வைரஸ் பரவல்களும் அறிகுறியற்ற தொற்றுநோய்களின் ஊடாக ஏற்படுவதாகவும் குறித்த ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது.

மேலும், அனைத்து தொற்று நோய்களிலும் 50 சதவீதமானவை அறிகுறிகள் இன்றியே ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து பெரும்பாலானவர்களுக்கு வைரஸ் தொற்று இலகுவில் தொற்றிவிடுவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top