ஒரே ஒரு டுவீட் செய்து உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இழந்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் பதிவிட்ட ஒரு டுவீட்டால் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதற்கு காரணம் ஒரே நாளில் அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் கண்ட வீழ்ச்சி தான் என தெரிந்துள்ளது.

எலான் மஸ்க் சமீபத்தில், ‘பணத்தை விட பிட்காயினே மேல்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த ஒரு டுவீட் தான் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைவதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த டுவீட் செய்த ஒரே நாளில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எலான் மஸ்க் இழந்துள்ளார்.

தற்போது 183.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அமேசான் நிறுவனர் ஜெப் பெஸாஸ் 186.3 பில்லியன் சொத்து மதிப்புடன் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top