நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காலை முதல் முன்னெடுத்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று முன்தினம் ஆரம்பித்தார்.

அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடன் இணைந்து, வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் என ஐந்து பேர் இந்தப் போராட்டத்தை நேற்று காலை முன்னெடுத்தனர். அதன் பின்னர் மேலும் பலர் அவர்களுடன் போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைது குறித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top