யாழ்ப்பாணத்தில் நாய்கள் காப்பகம் என்ற பெயரில் கடும் உயிர்வதை இடம்பெற்றுவருவதாக பிரபல சட்டத்தரணி ஒருவர் கூறியுள்ளார்.

தியாகி அறக்கட்டளை நிறுவனத்தால் யாழ் அரியாலையில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவரும் நாய்கள் சரணாலயத்திலேயே இந்த கொடுமைகள் நிகழ்ந்துவருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த சரணாலயத்தில் உள்ள நாய்களுக்கு சாப்பாடோ தண்ணீரோ வைக்கப்படாமல் பட்டினியால் துடிதுடித்து உயிரிழக்கும் பரிதாப நிலைமைகள் உள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த நாய்கள் சரணாலயத்தைப் பராமரிப்பவர்கள் நாய்களை வளர்ப்பதை விடுத்து கொல்லுவதிலேயே குறியாய் இருப்பது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் தனது முகநூலில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

மேலும் அங்கு பட்டினியால் உயிரிழந்த நாய் ஒன்றின் உடல் அகற்றப்படாமையினால் அந்த நாயின் உடலத்தை சக நாய்கள் உண்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top