பாடசாலை மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தீர்வு வழங்கியுள்ளார்.

திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் கிவுலேகடவல வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சித்திட்டத்தின் போதே இந்த மாணவி மேற்படி கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதி அந்த சந்தர்ப்பத்திலேயே விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பணியை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தார்.

மாணவியின் கோரகையை நிறைவேற்றும் வகையில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு இரண்டு மணி நேரத்திற்குள் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top