தமிழகத்தில் மருமகளுக்கு தொல்லை கொடுத்து வந்ததோடு அவரை வெட்டிய இளைஞனை கொலை செய்த மாமனாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியின் மேலபனைக்குளத்தை சேர்ந்தவர் ஜெபராஜ்.

இவர் மனைவி ஜிதாவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த யோவான் என்ற இளைஞர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் யோவான், அஜிதாவை அரிவாளால் வெட்டிவிட்டு சிறைக்கு சென்றிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்த யோவான், அஜிதாவின் குடும்பத்தினரை வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அஜிதாவின் மாமனார் செல்லத்துரை, அங்குள்ள காட்டுப்பகுதியில் யோவானை வெட்டிப்படுகொலை செய்தார்.

மேலும் அஜிதாவை யோவான் அரிவாளால் வெட்டிய அதே இடத்தில் யோவனின் வலது கையை துண்டித்து எடுத்துவந்து போட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதையடுத்து பொலிசார் தலைமறைவாக உள்ள செல்லத்துரையை வலைவீசி தேடி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top