இந்த முறை அரச வெசாக் நிகழ்வுகளை யாழ்ப்பாணம் – நாகதீபம் ரஜமகா விகாரையில் நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டதாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 65 விகாரைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளை இணைத்து அவற்றை ஒழுங்கமைப்பதற்கான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

 பாரம்பரிய வெசாக்பண்டிகைக்கு மாறாக ஏனைய மதத்தவர்களுடன் இணைந்து இந்த ஆண்டு வெசாக்பண்டிகையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top