சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா நடிப்பில் உருவாகியுள்ள கால்ஸ் படம் விரையில் வெளியாகவுள்ளது.




தொன்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மேலும் சித்ராவின் கணவர் ஹேமந்த் உள்ளிட்டோரிடம் விசாரித்ததில் ஹேமந்த் அடிக்கடி மது அருந்திவிட்டு சித்ராவிடம் சண்டையிட்டதும், படப்பிடிப்பு தளத்திற்கே வந்து சண்டையிட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சித்ராவின் தாயார் விஜயாவும் சித்ராவுக்கு பிரச்சனை கொடுத்ததாகவும் தெரிகிறது.



இந்நிலையில், சின்னத்திரை நடிகை ஒரு நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் சமீபத்தில் அவரது கணவர் ஹேமந்தை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்தனர் போலீஸார்.


இந்நிலையில், சித்ராவின் நடத்தையில் கணவன் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே அவர் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டதாக நசரத்பெட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கைதாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள நடிகை சித்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் கால்ஸ். இவர் ஹீரோயினான முதல்படம் இதுதான். இப்படத்தை சபரீஸ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


மேலும் இப்படத்தின் இசை இசை மற்றும் டிரைலர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. இதை சித்ராவின் அப்பா காமராஹ் மற்றும் அவரது விஜயா இணைந்து வெளியிடவுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top