பாடசாலை சென்று வரும் வழியில் தொலை பேசி இலக்கத்தை வழங்கி, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்று இரண்டு சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்ட இரண்டு இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

கோப்பாய் பகுதியில் வசித்து வரும் இரண்டு சிறுமிகளை வீதி வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் இருவர் ஒரே நேரத்தில் காதலித்து மறுநாள் நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்று தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் 18ம் திகதி நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தமக்கு நடந்த விடயத்தினை சிறுமிகள் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

இதன் அடிப்படையில் இளைஞர்கள் இருவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞர்களை சட்டவைத்திய அதிகாரி முன் ஆஜர் படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த சாவகச்சேரி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top