மேஷம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர் கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபா ரத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறு வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில்  உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள்உங்களுக்கு முன்னு ரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கன்னி: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.பணப்புழக்கம் கணிச மாக உயரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோ கத்தில் உங்களை பற்றி வதந்திகள் வரக்கூடும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண் டிருக்க வேண்டாம். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டுதொந்தரவு தருவார்கள். அசைவகார உணவுகளை தவிர்ப்பதுநல்லது. வீடுவாகனத்தை சீர் செய்வீர்கள். செலவுகள் அதிக
மாகும். வியாபாரத்தில் போட்டிகளைசமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

தனுசு: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

மகரம்: மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்து காட்டும் நாள்.

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் -மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top