பாகிஸ்தானில் 55 வயதான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் 19 வயதான அழகிய கான்ஸ்டபிள் இளம்பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தம்பதியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாகிஸ்தானில் டிஸ்பி பதவியில் இருப்பவர் நரோவால் ஷபீர் சட்டா (55). இவர் தலைமையின் கீழே இக்ரா (19) என்ற இளம்பெண் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தார்.

இக்ரா மீது ஷபீருக்கு பார்த்த உடனேயே காதல் ஏற்பட்டது, இதையடுத்து இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இருவருக்கும் பெரியளவில் வயது வித்தியாசம் இருக்கும் நிலையில் பலரும் இத்திருமணத்தை விமர்சித்துள்ள அதே சமயத்தில் பலரும் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

எப்படியிருந்தாலும் தன்னுடைய வாழ்க்கை குறித்து தீர்மானிக்கும் வயது இக்ராவுக்கு உள்ளது என்ற கருத்துகளும் சமூகவலைத்தளங்களில் முன் வைக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top