சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

நுணாவில், வைரவர் கோவிலடியை சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணொருவரே விபரீத முடிவெடுத்தார்.

நேற்று காலை அவது வீட்டில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தவரை அயலவர்கள் மீட்டு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவரது உயிர் பிரிந்தது.

3 மாதங்களின் முன்னரே யுவதி காதல் திருமணம் செய்திருந்தார், யுவதியின் பெற்றோர் சம்மதிக்காத நிலையில், பொலிஸ் நிலையம் வரை விவகாரம் சென்றது.

காதல் திருமணம் செய்யப் போவதாக ஜோடி உறுதியாக இருந்து திருமணம் செய்து கொண்டனர், குடும்ப தகராற்றினாலேயே யுவதி உயிரை மாய்த்துள்ளார்.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top