கேரள காவல்துறை அதிகாரி ஒருவர் மருத்துவமனை வெளியே கைக்குழந்தையைத் தூங்க வைக்கும் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

கேரள காவல்துறையில் பணியாற்றி வருபவர் கே.எஸ்.சுரேஷ். இவர் காயம்குளம் பகுதியில் பணி செய்து கொண்டிருக்கும்போது ஒரு விபத்து குறித்து தகவல் வந்துள்ளது.

குறித்த விபத்தில் எந்தவித காயமும் ஏற்படாமல், காரில் பயணித்த 7 மாத குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்துள்ளது.

காயமடைந்த அனைவரையும், காயம்குளம் அரசு மருத்துவமனையில் சிகிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், 7 மாத குழந்தை மட்டும் அழுதுகொண்டிருந்தது.

குழந்தையினை சமாதானப்படுத்த முயன்ற காவல்துறை அதிகாரி அக்குழந்தையினை தனது தோளில் சுமந்தபடி சமாதானப்படுத்த அங்கும் இங்கும் நடக்கத் தொடங்கியுள்ளார். குறித்த காணொளி தீயாய் பரவி வருகின்றது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top