நாட்டில் மேலும் 307 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 907ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 395 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 648ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில், இன்னும் இரண்டாயிரத்து 732 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

வெலிகம பகுதியை சேர்ந்த 73 வயதான ஆணொருவர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் மரணித்துள்ளார்.

மாத்தறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானமையை அடுத்து அவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டநிலையில் மரணித்துள்ளார்.

இரத்தம் விசமானமை மற்றும் கொரோனா நிமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 527ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top