யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவரை மர்மக்குழுவைச் சேர்ந்த சிலர் பொலிஸார் முன்னிலையில் அச்சுறுத்தியுள்ளனர்.


குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.


யாழ். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் அரசுக்கு ஆதரவான பெரும் பொதுக்கூட்டமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் ரௌடிகள் உள்ளிட்ட சிலரின் ஏற்பாட்டில் தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடந்து வருவதாக கூறி, சிலர் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்துள்ளனர்.



இந்த பேரணிக்காக வறுமையான, பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம், பணம் தருவதாக கூறி பேருந்துகளில் அழைத்து சென்றுள்ளனர்.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசு மீது நடவடிக்கையெடுக்கக்கூடாது, தமிழ் தரப்பினர் மீதே நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோசமிட வேண்டுமென கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த பெண் ஊடகவியலாளரை பொது வீதியில் வைத்து மிரட்டியுள்ளனர், இச் சம்பவம் இடம் பெறும் போது பொலிஸாரும் அருகில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top