இலங்கை தேசியக் கொடியினை உலகின் முன்னனி இணையவழி விற்பனை நிறுவனத்தின் கால் மிதிப்பான் மற்றும் செருப்புக்களில் அச்சிடப்பட்டமை தொடர்பில் வெளியான செய்திகளைத் அடுத்து, அது தொடர்பில் வொஷிங்டனின் சியாட்டிலில் உள்ள அமேசான் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வணிக / அலங்கார நோக்கங்களுக்காக தேசியக் கொடியின் படத்தைப் பயன்படுத்துதல் இலங்கை அரசின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறலாகும் என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இ-காமர்ஸ் தளங்களில் இருந்து சம்பந்தப்பட்ட பொருட்களை உடனடியாக அகற்றுமாறு தூதரகம் அமேசான் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தது.

மேலும் அமெரிக்க வர்த்தகத் துறை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் அலுவலகம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் தொடர்புடைய பிரிவுக்கு நிலைமையை தெரிவிக்கவும் இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் முன்னேற்றங்களை கண்காணித்து வருவதுடன் ஆன்லைனில் அந்தந்த தயாரிப்புகளின் வர்த்தகத்தை நிறுத்தும் நோக்கில் அமேசான் நிறுவனம் மற்றும் தொடர்புடைய அமெரிக்க அரசாங்க அதிகாரிகளுடன் ஈடுபட தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top