தமிழகத்தில் கணவனை கொல்வதற்காக காதலனுடன் சேர்ந்து சினிமா பாணியில் மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தண்டபாணி(38). காய்கறி வியாபாரியான இவருக்கு தேவி(35) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 14-ஆம் திகதி தேவி தன்னுடைய கணவரை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.இதையடுத்து பொலிசார் இது குறித்து மனைவியான தேவியிடம் கடந்த ஒரு வாரமாக விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அப்போது தேவி மீது பொலிசாருக்கு சந்தேகம் வலுத்ததால், தேவியின் நடவடிக்கையை பொலிசார் கண்காணிக்க துவங்கிய போது, அவருக்கு தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்த்னர்.அதன் பின் தேவி மற்றும் தாரபுரத்தில் இவருடன் பழக்கத்தில் இருந்த பனியன் தொழிலாளி அபிஷேக்(20) என இருவரையும் விசாரணை மேற்கொண்டனர்.

இருவரின் காதலுக்கு தண்டபாணி இடையூறாக இருந்ததால், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன் படி சினிமா பாணியில் அவரை கொலை செய்து, சடலத்தை தாராபுரத்தில் இருக்கும் கிணற்றில் வீசியுள்ளதாக கூறியுள்ளனர்.

பொலிசார் உடனடியாக தீயணைப்பு வீரர்களுடன் அங்கு சென்ற சடலத்தைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், கடந்த, 10 ஆண்டுக்கு முன் தண்டபாணியை, தேவி திருமணம் செய்தார்.

தாராபுரம் பகுதியில் தேவி, பழ வியாபாரம் செய்த போது, அபிஷேக் உடன் பழக்கம் ஏற்பட்டது. இதற்கு தண்டபாணி இடையூறாக இருப்பதாக நினைத்த தேவி, அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.கடந்த, 14-ஆம் திகதி அபிஷேக்கை தொடர்பு கொண்ட தேவி, கீரனுாருக்கு வரவழைத்து, கணவரை அதிகமாக மது அருந்த வைத்தார்.

அதன்பின், இருவரும் சேர்ந்து, தண்டபாணி முகத்தில் பாலித்தீன் பையை மாட்டி, கை கால்களை கட்டி, கொலை செய்துள்ளனர்.அதைத் தொடர்ந்து, சடலத்தை சாக்குப்பையில் கட்டி, இரு சக்கர வாகனத்தில் வைத்து, தாராபுரம் புதிய அமராவதி பாலம் அருகே உள்ள பயன்பாடற்ற கிணற்றில், வீசியுள்ளனர்.

இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top