யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று அதிகாரிக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனால் அவர் பணியாற்றுகின்ற ஒழுக்காற்று பிரிவு அலுவலகத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களும் ஒழுக்காற்று அதிகாரியுடன் நெருக்கமான தொடர்பிலிருந்த சில விரிவுரையாளரகளும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.


இதேவேளை,


யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 43 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அவர்களில்


யாழ்ப்பாணத்தில் 22 பேர் அவர்களில் 11 பேர் வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்.


மன்னார் மாவட்டத்தில் 17 பேர்,


வவுனியா மாவட்டத்தில் 04 பேர்


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top