ஹாலிஎல பகுதியில் பயிர் நிலத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்இணைப்பு வேலியில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவனால் அமைக்கப்பட்டிருந்த வேலியில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளார்.

ஹாலி எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லந்தேவெல பகுதியில் இன்று செவ்வாய்கிழமை காலை பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயிர் நிலத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் மின்சார இணைப்பொன்றை ஏற்படுத்தி வைத்துள்ளதுடன் , அதனை இரவு நேரம் மாத்திரமே செயற்பாட்டில் வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் , காலை வேளைகளில் அதனை அகற்றியுள்ள அவர் , சம்பவ தினத்தன்று உறக்கத்தில் இருந்ததன் காரணமாக அதனை அகற்ற மறந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதனை அறியாத அவரது மனைவி , காலைவேளை உணவை சமைப்பதற்காக , தங்களது தோட்டத்தில் உள்ள மரக்கறிகளை பறிக்கச் சென்றுள்ளார்.

பின்னர் மின்சார தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் , நீண்டநேரம் தாய் வீடு திரும்பாமையின் காரணமாக அவரது மகள் தேடிச் சென்றுள்ளார்.

தாய் மயங்கி விழுந்திருப்பதை அவதானித்த அவர் அயலவர்களுடன் இணைந்து தாயாரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் , அதன்போதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹாலி எல - லந்தேவெல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் , 59 வயதுடைய அவரது கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பபான மேலதிக விசாரணைகளை ஹாலி எல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top