வவுனியா – மகாறம்பைக்குளம், ஸ்ரீராமபுரம் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் நேற்று கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன
கடந்த மாதம் 5ஆம் திகதி வவுனியா – ஹெப்பிட்டிகொலாவ விசேட படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஈரட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பட்டா வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 18270 கிலோ கிராம் கஞ்சா பொதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனைக் கடத்தி சென்ற மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட மூவரிடமும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மகாறம்பைகுளம் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த (வயது 65) சந்தேகநபரின் வீட்டில் மேலதிகமான கஞ்சா பொதிகள் மறைத்துவைக்கப்பட்டு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது
குறித்த நபர் வழங்கிய தகவலினை அடுத்து நேற்று ஸ்ரீராமபுரத்தில் அமைந்துள்ள குறித்த நபரின் வீட்டில் ஈரட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 6540 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் ஈரட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன

0 comments:
Post a Comment