தமிழகத்தில், மைத்துனரை கூலிப்படை ஏவி கொலை செய்த அண்ணியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்னையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கொஞ்சி அடைக்கான். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு ஸ்ரீபெரும்புதூரில் சொந்த வீடு உள்ளது. இதனால் இவர், தன் பெரியம்மா மகனின் குடும்பத்தை ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்து தன் வீட்டில் வசிக்க வைத்துள்ளார்.

அப்போது, சகோதரரின் மனைவி சித்ராவுக்கும் கொஞ்சி அடைக்கானுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது.

சகோதரர் கண்டித்தும் கொஞ்சி அடைக்கானும் சித்ராவும் தங்கள் உறவை கைவிடவில்லை. இதனால், சித்ராவின் கணவர் தன் சொந்த ஊருக்கே சென்று விட்டார்.

சித்ரா தன் குழந்தைகளுடம் கொஞ்சி அடைக்கானுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கொஞ்சி அடைக்கானின் பெற்றோர் பழனியம்மாள் என்பவரை கொஞ்சி அடைக்கானுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இவர்களின் திருமணம் கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்துள்ளது. தன்னுடன் வாழ்ந்து விட்டு, மற்றோரு பெண்ணை திருமணம் செய்ததால், சித்ரா கடும் கோபமடைந்தார்.

மேலும், கொஞ்சி அடைக்கான் கட்டிய ஸ்ரீபெரும்புதூர் வீட்டில் வசிக்கவும் தம்பதியை சித்ரா விடவில்லை. இதனால், காஞ்சிபுரத்தில் செவிலிமேடும் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கொஞ்சி அடைக்கானும் பழனியம்மாளும் வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு தனுஷியா என்று பெயர் வைத்துள்ளனர்,

இதற்கிடையில், சித்ரா வசித்து வந்த தன் வீட்டை கொஞ்சி அடைக்கான் விற்க முயற்சித்து வந்தார்.

அண்ணி சித்ராவை காலி செய்யவும் அவரிடம் கொடுத்த பணம் உள்ளிட்டவற்றை கேட்டு கொஞ்சி அடைக்கன் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த வீட்டின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தான் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற தன் கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று என்று பழனியம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில், சித்ரா பொலிசாரிடம் சிக்கிக் கொண்டார். அவர் தான் இருக்கும் வீட்டை அபகரிக்கும் நோக்கில் கொஞ்சி அடைக்கான் இருந்ததால், அவரை சதித்தீட்டம் திட்டி சித்ரா கொலை செய்துள்ளார்.

இதற்காக அவர், டார்ஜன்குமார் என்பவரை அணுகியுள்ளார். டார்ஜன் குமார் தன் கூட்டாளிகளான விவேக் என்கிற விவேகானந்தன், சதீஷ்குமார், சுப்ரமணியன், சங்கரநாராயணன் ஆகியோர் மூலமாக கொஞ்சி அடைக்கானை காரில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின், மண்ணிவாக்கம் மேம்பாலம் கீழே காரில் வைத்து சீட் பெல்ட்டால் கொஞ்சி அடைக்கனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

அதன் பின், கொஞ்சி அடைக்கானின் உடலை அமர்ந்தபடி கை கால்களை கட்டி இரும்பு பேரலில் உள்ளே அடைத்து அதற்கு மேல் ஜல்லி கான்கிரீட் போட்டு நிரப்பியுள்ளனர். தொடர்ந்து அந்த பேரலை, சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பட்டு கிராமத்தில் ஒரு கிணற்றில் போட்டு விட்டு சென்றுள்ளனர்.

இவர்கள் அளித்த தகவலின் பேரில் பொலிசார் கிணறு இருக்கும் பகுதிக்கு சென்று அந்த பேரலை வெளியில் எடுத்து பார்த்த போது, கான்கிரீட்டுக்குள் எலும்புகூடுகள் மட்டுமே இருந்துள்ளது.

கொலை நடந்து ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது.

கொஞ்சி அடைக்கனை கொலை செய்ய கூலிப்படைக்கு சித்ரா 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதையடுத்து, இந்த வழக்கில் ஏழுமலை, சித்ரா, ரஞ்சித், டார்ஜன்குமார், விவேக் என்கிற விவேகானந்தன், சதீஷ்குமார், சுப்ரமணியன் ஆகியோரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top