வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவனின் சடலத்தினை பொலிசார் நேற்று மீட்டுள்ளனர்.

குறித்த சிறுவன் நேற்றயதினம் மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல்பகுதிக்குசென்றுள்ளான். நீண்ட நேரத்தின் பின்னர் சிறுவன் வீடு சென்றிருப்பார் என்ற எண்ணத்தில் குறித்தபெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.
எனினும் சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் பெற்றோர்கள் உறவினர்களால் தேடுதல் நடாத்தப்பட்டது.

இதன்போது குறித்தசிறுவன் வயல்பகுதியில் விழுந்து கிடப்பதை அவதானித்த பெற்றோர்கள் அவனை உடனடியாக மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் குறித்த சிறுவன் முன்னமே சாவடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மருதமடுவ பகுதியை சேர்ந்த வீரசிறி தேனுகருக்சான் என்ற 7வயது சிறுவனே சாவடைந்துள்ளான். பாம்பு தீண்டி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top