திருகோணமலை மொறவேவா யாயா சிங்கள மகா வித்தியாலய பாடசாலையில் தோட்டம் அமைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

உலக அளவில் தற்சார்பு உள்ள தொழிலாக இருந்து வருவது விவசாயம் மட்டும்தான். யார் என்ன தொழில் செய்தாலும், அவர்களின் உணவுத் தேவைக்காக விவசாயம் செய்பவர்களை அணுகித்தான் ஆகவேண்டும்.

விவசாயம் குறித்து விழிப்புணர்வு இல்லாமலும், அது குறித்த ஆர்வம் இல்லாமலும் மாற்றுத் தொழிலுக்குச் செல்கின்றனர்.

எனவே விவசாயத்தின் முக்கியத்துவத்தை பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் ஏற்படுத்தும் முயற்சியாக கோமரங்கடவ வலயத்தை அடுத்த மொறவேவ கிராம பாடசாலை அதிபர் செனவிரத்ன, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து இயற்கை விவசாயம் மூலம் மரக்கறி தோட்டத்தை உருவாக்கி விவசாயத்தில் புரட்சி செய்துள்ளனர்.

 

திருமலை மாவட்டம், மொறவேவ பகுதியில் அமைந்துள்ளது கிராமம். இங்குள்ள பள்ளியில் அதிபருடன் சேர்த்து 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

180 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி 1.25 ஏக்கர் பரப்பு கொண்டது. இதில் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் போக மீதம் சுமார் 50 பேர்ச் இடம் காலியாக உள்ளது.

இந்த இடத்தில் தேசிய பசுமைப் அமைப்பு நிதியுதவியுடன்அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து விவசாயம் செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக 50 பேர்ச் இடத்தை உழுது, அதில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தனர். அதில் 150-க்கும் அதிகமான வாழைக் கன்றுகளை மற்றும் மரக்கறி நடவு செய்தனர்.

பாடசாலை வளாகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு, தொட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தி சொட்டு நீர்ப் பாசனம் மூலம் வாழைக்கு நீரை ஊற்றினர்.

இயற்கை உரம் வைத்து தோட்டத்தை பராமரித்து வந்தனர். 9 மாதங்களைக் கடந்த நிலையில் தற்போது வாழைகளில் பெரிய அளவில் வாழைத் தார்களைப் பார்க்க முடிகிறது.

அத்தோடு மரக்கறி பூத்து குழுங்குன்றது சில நாள்களில் வாழைகுலைகளும் மரக்கறிகளும் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

பாடசாலைக்குச் சென்றால் கற்றல் பள்ளி என்ற நினைவுகள் மாறி ஒரு பெரிய விவசாயத் தோட்டத்துக்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

நிலத்தை உழவு செய்ததில் இருந்து வாழைத்தார் விடும் வரை மாணவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தியுள்ளதால் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த ஆர்வமும், விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று பெருமைப்படுகின்றனர் பாடசாலை நிர்வாகத்தினர்.

இது குறித்து அதிபர் செனவிரத்தின கூறுகையில், ""இந்த கிராமம் விவசாயம் சார்ந்த பகுதி ஆகும். தற்போதுள்ள இளைய தலைமுறையினரில் பலர் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

அதனால், பள்ளிப் பருவத்தில் விவசாயம் குறித்து ஆர்வம், விழிப்புணர்வு, நீர் மேலாண்மை ஆகியவை குறித்து செயல்முறையாக நாங்கள் எங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம்.

எங்களது பள்ளியில் வாழை,மரக்கறிதோட்டம் அமைத்து தற்போது அறுவடைக்குத் தயாராகும் நிலையில் உள்ளது.

இந்த வாழை குலை,மரக்கறிகளை விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தில் மேலும் விவசாயத்தைப் பெருக்குவோம்'' என்றார்.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top