வன்னி பெரு நிலப்பரப்பில் சட்டவிரோதமான மண் அகழ்வுகள் நடைபெறுவதாகவும் இதனை பொலிஸாரும் கண்டுகொள்ளாமல் விடுவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மாங்குளம் கனகராயன் குளம் பகுதிகளிலுள்ள காட்டு நிலங்களிலேயே இந்த நாசகார செயற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் மண்ணை திருடிச் சென்ற கொள்ளைக் கும்பல் மரத்தின் பக்க வேரோடு வெட்டியெடுத்துச் சென்றதால் பல ஆயிரக் கணக்கான மரங்கள் ஆணிவேரிலேயே நிற்பதாகவும் பலமான புயல் காற்று வீசுமாயின் அவை அத்தனையும் பாறி விழுந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா முல்லைத்தீவு எல்லைப் பகுதிகளில் உள்ள பணிக்கன்குளம், கொக்காவில், மாங்குளம் ஆகிய பகுதிகளில் இதை விட மிகவும் மோசமான மண் திருட்டு இடம்பெறுவதாகவும், பொலிஸாரின் துணையுடனேயே இந்த திருட்டு நடைபெறுவதாகவும் அயற்பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top