நீர்கொழும்பு தமிழ் யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் அவரை, பல வருடங்களாக மிரட்டி தகாத முறையில் நடந்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் சுற்றுலா விடுதியின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று முன்தினம் அவர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, நீதிபதி என்.எல்.மஹாவத்த, சந்தேக நபரை இந்த மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

24 வயதுடைய யுவதியொருவரே தற்கொலை செய்து கொண்டார்.

நீர்கொழும்பு, குடாப்பாடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சிறிலால் பெர்னாண்டோ ஹொட்டல் மற்றும் ட்ரோலர் உரிமையாளர் ஆவார்.

4 பிள்ளைகளின் தந்தையான 50 வயது தொழிலதிபர், யுவதியொருவருடன் 10 வருடமாக தகாத முறையில் நடந்துகொண்டதுடன் , அதை படம் பிடித்து வைத்துள்ளார்.

14 வயதில் அறியாத வயதில் அவருடன் நெருக்கமாக இருப்பதை வீடியோ படம் பிடித்து, அதை வைத்தே 10 வருடமாக யுவதியை அவர் மிரட்டிவந்துள்ளார்.

இந்த மனஅழுத்தம் தாங்க முடியாமல் யுவதி தற்கொலை கொண்டதாக கூறப்பட்டது.

அவர் தற்கொலை செய்த போது எழுதிய கடிதத்தை சந்தேகநபரின் பெயரை தெளிவாக எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், பல ஆண்டுகளாக குறித்த தொழிலதிபர் தன்னை மிரட்டி தகாத முறையில் நடந்துகொண்டதால் தான் உயிர் இழந்ததாகவும் கூறியிருந்தார்.

இதேவேளை சம்பவத்தில் 14 வயது சிறுமியாக இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதன் பாரதூர தன்மையை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், சிறீலால் பெர்னாண்டோ, யுவதியை 14 ஆண்டுகளாக அறிந்திருப்பதாகவும், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த போதிலும், அவர் அவளுடன் எந்தவிதமான பாலியல் உறவையும் கொண்டிருக்கவில்லை, குறைந்தபட்சம் யுவதியின் கையைகூட தொடவில்லை என்றும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் யுவதியின் பிரேத பரிசோதனையில் தொழிலதிபர் கூறியது பொஇ என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top