யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் இந்த ஆண்டு தரம் ஒன்று வகுப்பு அனுமதியின் போது மேலதிக மாணவர்களை இணைத்ததாக கூறப்படும் அதிபர் இடமாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் வலயத்தின் பிரபல பாடசாலையில் தரம் 1 அனுமதியில் வலய அதிகாரியின் வழிப்படுத்தலில் மேலதிக அனுமதி வழங்கப்பட்டதாகவும் – அதன் மூலம் அறவிடப்பட்ட தொகை அதிகாரியின் பிரியாவிடை தொடர்பில் அச்சிடப்பட்ட புத்தகத்திற்கான செலவுப் பணம் வழங்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து இவ்வாறு அப்பாடசாலை அனுமதியில் மேலதிகமாக மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளனரா எனப் பரிசீலனை செய்த கல்வி அமைச்சு குறித்த விடயத்தில் உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் அப்பாடசாலை அதிபரை உடனடியாக இடமாறிச் செல்லுமாறு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top