பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவி ஒருவர் கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது கர்ப்பத்திற்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டில் அதே பாடசாலையில் கல்வி பயிலும் 14 வயதான மாணவனை கடந்த 30ஆம் திகதி மாரவில பொலிசார் கைது செய்தனர்.

நாத்தாண்டியா கல்வி வலயத்திலுள்ள இளநிலை பாடசாலையில் கல்வி பயலும் மாணவியே இவ்வாறு கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருவரும் சில காலமாக காதல் வசப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மாரவில பொலிஸ் தலைமையகத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை பொறுப்பேற்று விசாரணை நடத்தினர்.

பாடசாலையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

பொலிசார் வீட்டுக்கு சென்று விசாரணையை முன்னெடுக்கும் வரை, தமது மகள் கர்ப்பந்தரித்திருந்ததை பெற்றோர் அறிந்திருக்கவில்லை. மிக இரகசியமாக வீட்டில் மறைத்துள்ளார்.

மாணவி கற்றலில் திறமையான மாணவியென பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில், அதே பாடசாலையில் கல்வி பயிலும் 14 வயது மாணவனை பொலிசார் பொறுப்பேற்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இருவருக்கும் சில காலமாக காதல் உறவு இருந்ததும், அது எல்லை மீறி சென்றதம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மருத்துவ பரிசோதனைக்காக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிறுமி குழந்தையை பெற்றெடுத்த பின்னர், உண்மையான தந்தை 14 வயது மாணவன்தானா என்ற மரபணு பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

0 comments:

Post a Comment

Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top