கொரோனா பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருவதன் சிரமத்தை கருத்திற்கொண்டு தொலைபேசி, தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க மற்றும் நிறைவேற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 02 வார காலப்பகுதியில், ஜனாதிபதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு, ஒம்பூட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியம் ஆகியவற்றுடன் பின்வரும் தொலைபேசி / தொலைநகல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு –(தொலைபேசி – 0114354550/0112354550) (தொலைநகல் – 0112348855) (மின்னஞ்சல் – publicaffairs@presidentsoffice.lk)

ஒம்புட்ஸ்மன் அலுவலகம் – (தொலைபேசி – 0112338073) (மின்னஞ்சல் – ombudsman@presidentsoffice.lk)

ஜனாதிபதி நிதியம் – (தொலைபேசி – 0112354354) (கிளை எண் – (4800/4814/4815/4818) ) (தொலைநகல் – 0112331243) (மின்னஞ்சல் – fundsecretary@presidentsoffice.lk)   


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top