தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பொறுப்பற்ற முறையில் காரொன்றில் பயணித்த குழு தொடபில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த வாகனம் கண்டியைச் சேர்ந்த நபரொருவருக்குச் சொந்தமானது என, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த காரின் கதவில் வெளிப்புறமாக அமர்ந்து சிலர் பயணித்துள்ளமை தொடர்பில் காணொளிகளும், படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் வாகனத்தில் பயணித்தமைக்காக அவர்கள் மீது, மோட்டார் போக்குவரத்து சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top