ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில், நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு உதவும் பொருட்டு, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான நடைமுறையை வெளிநாட்டு அமைச்சு இன்று (2021, ஏப்ரல் 06) மீளாய்வு செய்தது.

புதிய நடைமுறையின் கீழ், இலங்கையர்கள், இலங்கையின் கடவுச்சீட்டுக்களில் பயணம் செய்யும் இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள், வெளிநாட்டவர்களாக இருக்கும் இலங்கையர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் திருமணமாகாத பிள்ளைகள் மற்றும் விமானம் மூலம் வருகை தரும் இலங்கை மாலுமிகள் ஆகியோர் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றின் முன் அனுமதியின்றி இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

எனினும், பயணிகளின் வருகையை நிர்வகிக்கும் பொறுப்பு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் தனிமைப்படுத்தல் மற்றும் தேவையான வசதிகளை வழங்கும் வகையில் குறித்த அதிகாரசபை உரிய விமான நிறுவனங்களினூடாக வருகை தருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.

வருகை தரும் அனைத்து பயணிகளும் சுகாதார நெறிமுறைகள் மற்றும் விஜயத்தின் போது நடைமுறையிலிருக்கும் அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயமாகப் பின்பற்றுதல் வேண்டும்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top