இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் முல்லேரியா வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கை உச்ச அளவை எட்டியள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கிழக்கு ஆதார (முல்லேரியா) வைத்தியசாலையில் தற்போது தங்கியிருந்து சிகிச்சை பெரும் நோயாளர்களின் எண்ணிக்கை உச்ச அளவை எட்டியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், வைத்தியசாலையினுள் பிரணவாயுவுக்கு (ஒக்சிஜன்) எவ்விதத்திலும் தட்டுப்பாடு நிலவவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். முல்லேரியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகையை மேற்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்பாடுகளில் கலந்துகொண்டபோதே வைத்தியசாலை பணிப்பாளர் இவ்விடயத்தை தெரிவித்தார். வைத்தியசாலை பணிக்குழாமைச் சேர்ந்த 600 பேருக்கு கொவிட் தடுப்பூசி இரண்டாம் செலுத்துகை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்ச அளவை எட்டியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நோயாளர்களை வகைப்படுத்தி, உரிய முறையில் இந்த நிலைமையை முகாமை செய்வதற்கு சுகாதார அமைச்சினால் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, நோயாளர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது நடவடிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லேரியா வைத்தியசாலையில் எவ்வித பிராணவாயு தட்டுப்பாடுகளும் இல்லையெனினும், பிராணவாயு கொள்கலன்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக விசேட வைத்தியர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top