இலங்கையில் மேலும் 11 கொவிட் மரணங்கள் பதிவான நிலையில் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 720ஆக அதிகரித்துள்ளது இதன்படி, இறுதியாக 11 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

அதேவேளை தற்போது நடத்தப்படுகின்ற கொரோனா பரிசோதனைகள் 11ல், ஒரு கொவிட் தொற்றாளர் அடையாளம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

சுகாதார கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், 9 பரிசோதனைகளில் ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top