நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கையில் யாழில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்.

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top