கொழும்பு துறைமுக நகர திட்டத்துடன் கொழும்பு கோட்டை பிரதேசத்தில் உள்ள மேலும் 200 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல குற்றம் சுமத்தியுள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு கூட அனுமதிப் பெற்றப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.


இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய கொழும்பில் வெளிவிவகார அமைச்சு அமைந்துள்ள காணி, கபூர் கட்டடம் அமைந்துள்ள காணி, கிரேண்ட் ஒரியண்டல் ஹோட்டல் அமைந்துள்ள காணி, மத்திய அஞ்சல் நிலையம் அமைந்துள்ள காணி, சீனோர் மற்றும் தாமரை தடாகத்திற்கு அருகில் உள்ள காணிகள், ஹில்டன் ஹோட்டல், விளையாட்டு தொகுதி அமைந்துள்ள காணி என்பவற்றை அரசாங்கம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.


நாடும், தேசியம் பற்றி பேசிக்கொண்டு ஆட்சி வந்த அரசாங்கம் தற்போது வேறு விதமாக செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் அனைத்தையும் விற்பனை செய்து வருகிறது. இது குறித்து மக்களுக்கு விளக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் நாடாளுமன்றத்திலும் தகவல் வெளியிடப்படும் எனவும் அலவத்துவல குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top