இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சிதை மீது குதித்த மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தாஸ் மகேஷ்வரி (70) என்ற நபர் சமீபத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் சடலம் எரிக்கப்படுவதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் கொரோனாவால் இறந்ததால் குடும்பத்தாரை அருகில் அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் அங்கிருப்பவர்களிடம் சண்டையிட்டு தாஸின் மூன்று மகள்களும அங்கு சென்றனர். தாஸுக்கு மகன் இல்லை என்பதால் மூன்று மகள்களும் இறுதிசடங்கு செய்தனர்.

பின்னர் அவர் சடலம் எரிக்கப்பட்டது. அப்போது திடீரென தாஸின் திருமணமாகாத மூன்றாவது மகள் சந்திரகலா (33) எரிந்து கொண்டிருந்த சிதை மீது குதித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சகோதரி சந்திரா, சந்திரகலாவை வெளியில் இழுத்து போட்டார்.

இதையடுத்து 70 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் சந்திரகலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த சந்திரகலா அவரின் பிரிவை தாங்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top