கொரோனா மற்றும் இதயக் கோளாறு பிரச்னையிலிருந்து நடிகர் அருண் பாண்டியன் மீண்டு வந்தது குறித்து அவருடைய மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் நடித்த அன்பிற்கினியாள் படம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அருண் பாண்டியன் அதிலிருந்து மீண்ட பிறகு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதுபற்றி நடிகை கீர்த்தி பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:

ஒருநாள் இரவு அப்பாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தூங்கவும் முடியாமல் இருந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அடுத்த நாள் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. திருநெல்வேலியில் அவரை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருந்தோம். நீரிழிவு நோயும் இருந்ததால் எங்களுக்குப் பயமாக இருந்தது. அப்பா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் கரோனா பாதிப்பு அதிகமாக இல்லை.


பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியான பிறகு மதுரையில் இதயப் பரிசோதனை மேற்கொண்டார். அவர் நலமாக உள்ளதாக முடிவுகள் தெரிவித்தன. ஆனாலும் அப்பாவுக்குத் திருப்தி ஏற்படவில்லை. இதனால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தினார் மருத்துவர் பவித்ரா. அதில் அவருக்கு இதயத்தில் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள், பணியாளர்கள் அக்கறையுடன் கவனித்துக்கொண்டதால் என்னுடைய அப்பா தற்போது நலமாக உள்ளார். நன்றாகவே மீண்டு வருகிறார்.


அனைவரும் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள், முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என்றார்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top