இன்று பிற்பகல் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த வாகனத்துக்கு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாகனம் விபத்துக்குள்ளாகியது.

அதில் பயணித்த மூவர் தப்பிச்சென்ற நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் தப்பியோடியவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அத்துடன், மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட ஹன்டர் வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஹன்டர் வாகனத்தை சிறப்பு அதிரடிப் படையினர் வழி மறித்தபோது கட்டளையை மீறி பயணித்த வாகனமீது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்காரணமாக வாகனத்தின் ரயர் வெடித்த நிலையில் கட்டுப்பாட்டையிழந்த ஹன்டர் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதனையடுத்து அதில் பயணித்தவர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மட்டும் முள் கம்பிக்குள் சிக்கிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top