யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் வெள்ளிக்கிழமை (28) விடுதலை புலிகளின் கடல் புலி உறுப்பினர் ஒருவர் 2 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய சக்திவாய்ந்த கிளைமோர் குண்டை யாழ்ப்பாண நாகர் கோவில் மீன்பிடி துறைமுகத்தில் புதைத்து வைக்கப்பட்டமைக்காக கைது செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.


எனினும், உறவினர்கள் அதை மறுக்கிறார்கள். இராணுவ புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், அந்த இடத்தில் ஒரு சோதனை நடத்தப்பட்டு, முன்னாள் கடல் புலி உறுப்பினரை கைது செய்துடன் 2 கிலோ சக்திவாய்ந்த கிளைமோர் வெடிகுண்டு, டி -56 துப்பாக்கி ரவைகள் 14, 45 கைத்துப்பாக்கி ரவைகள், 12.7 வகை ரவை ஒன்று மற்றும் இரண்டு மீட்டர் நீள டெட்டனேட்டர் நூல் என்பனவும் மீட்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.வெடிபொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


எனினும், அவர் கைது செய்யப்பட்ட சமயத்தில் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சோடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்படுவதாக குற்றம்சுமத்தினர்.


கடந்த தைப்பொங்கல் சமயத்தில், சச்சரவொன்றை தொடர்ந்து இராணுவத்தினருடன் சில இளைஞர்களிற்கு மோதல் ஏற்பட்டது.


அதை தொடர்ந்து, சில இளைஞர்கள் தலைமறைவாகியிருந்தனர். அந்த சம்பவத்தில், தற்போது கைதானவரும் தலைமறைவாகியிருந்தார்.


பின்னர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த பின்னணியிலேயே இவர் கைதானதாக உறவினர்கள் குற்றம்சுமத்துகிறார்கள்.


எனினும்,தற்போது கைானவரிமிருந்து கைப்பற்றப்பட்டதாக ஒரு தொகுதி வெடிபொருட்களின் புகைப்படங்களையும் இராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். 


இவர்களை வெளிநாடுகளில் இருந்து இயக்கியது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன், அவர்கள் சார்ந்த தகவல்களை அவர்கள் உள்ள நாடுகளின் துாதரகங்களின் உதவியுடன் பெறுவதற்கு முதற் கட்டமான முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளதாக விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.


மேலும் கைது செய்யப் பட்டவரிடம் மேற் கொள்ளப்படும் மேலதிக விசாரணைகள் மூலம் பெறப்படும் தகவலின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் உள்ளவர்களை சர்வதேச பொலிசாரின் உதவியுடன் மீள அழைப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு செய்தியாளர் ஜெயந்த நிலமே  தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top