கொழும்பு துறைமுகத்திற்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவல் ஏற்பட்ட எம்.வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் (MV XPress Pearl) தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது குறித்த கப்பல் முழுவதிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் கடற்படை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் சமுத்திர பாதுகாப்பு கப்பலும், விமானமும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, தீப்பற்றியுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய இரசாயன மற்றும் ஏனைய பொருட்கள் வத்தளை – ப்ரீதிபுர முதல் நீர்கொழும்பு வரையான கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் அவ்வாறான பொருட்களை தொட வேண்டாம் என கடல்சார் சமுத்திர பாதுகாப்பு அதிகாரபை, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

எனினும், அந்த அறிவுறுத்தலையும் மீறி கரையொதுங்கிய பொருட்களைக் கொண்டு சென்றவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top