கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பொதுச்சுடர், நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், உப தவிசாளர் சின்னையா தவபாலன், ஏனைய உறுப்பினர்களான தாமோதரம்பிள்ளை ரஜனிகாந்த், லலிதகுமாரி சத்தியமூர்த்தி, ஆறுமுகம் சிவநேசன், அருணாசலம் சத்தியானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top