நடிகை ஸ்ருதி ஹாசன் தான் போதைக்கு அடிமையாகி கஷ்டப்பட்டு வந்ததாக பேட்டி அளித்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு பட உலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.வரிசையாக நிறைய தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருகிறார். தமிழில் வாய்ப்பு குறைந்தாலும் தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் எதிர்காலத்தில் சில படங்களில் அவர் நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.என்ன பேசினார்

இந்த நிலையில் ஏற்கனவே இவர் தனது காதல் முறிவு குறித்து பேசினார். அதில், என்னை சிலர் ஏமாற்றிவிட்டனர்.நாம் எல்லோரிடமும் உண்மையாக இருப்போம். ஆனால் மற்ற எல்லோரும் நம்மிடம் அப்படி இருப்பது கிடையாது. சிலர் நம்மை மோசமாக நடத்துவார்கள். நான் உண்மையான காதல் கிடைக்குமா என்று இப்போது காத்துக் கொண்டு இருக்கிறேன், எனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.


தற்போது எப்படி


தற்போது தன்னுடைய போதை பழக்கம் குறித்து பேசியுள்ளார். அதில், ஆம் முன்பு நான் போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தேன். ஒரு காலத்தில் நான் விஸ்கி அதிகமாக குடிப்பேன். இப்போது அப்படி இல்லை.


யாருக்கும் தெரியாது


நான் அப்படி இருந்தது யாருக்கும் தெரியாது. இதை எல்லோரிடமும் இருந்து மறைத்துவிட்டேன். தற்போது மொத்தமாக இதை நிறுத்திவிட்டேன்.


உடல் நிலை 


என்னுடைய உடல் நிலை இதனால் மோசமாக பாதிக்கப்பட்டது. அதனால் இந்த போதை அடிமை தொடர்பாக சிகிச்சை மேற்கொண்டேன். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சிகிச்சை எடுத்து சரியாக முயற்சி செய்து வருகிறேன்., என்று குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top