பொரள்ள பொலிஸ் பிரிவில் உள்ள மெகசின் வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தமக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

மெகசின்  பகுதியில் உள்ள சங்கீத் தனுஸ்க என்ற 28 வயதுடைய இளைஞனுக்கு தொற்று இருப்பது கடந்த 26ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பொரள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுகாதார அதிகாரிகளுடன் நேற்று (28) இளைஞனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியாமலேயே அவர் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்தால் பின்வரும் தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள்.

பொரள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071 85 91 587

பொரள்ள பொலிஸ் நிலையம் - 011 26 94 019


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top