திருமணத்தினை மீறிய உறவினைக் கணவன் கண்டித்ததால், தூங்கிய போது கணவரை பெட்ரோல் ஊற்றி தீவைத்து மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுசென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் கைவேலி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (42). இஸ்திரி போடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (34).

இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கணவருக்கு தெரியாமல் தொடர்பு வைத்துள்ளார். இச்சம்பவம் கணவர் பாண்டிக்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார்.ஆனாலும் கேட்காமல் தனது தொடர்பினை தொடர்ந்ததால், இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

சம்பவத்தன்று தூங்கிக்கொண்டிருந்த கணவர் மீது, பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு பின்பு வெளியே கதவை மூடிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.உடல் முழுவதும் தீப்பற்றிய பாண்டி அலறி துடித்து கருகின பாண்டியின் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து ஆபத்தான நிலைியல் பாண்டியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு உயிருக்கு போராடிய அவர், நீதிமன்ற நடுவரிடம் தனது வாக்குமூலத்தினை கொடுத்துள்ளார். அதில் தனது மனைவி இவ்வாறு தன் மீது பெற்றோர் ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கூறிவிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பாண்டியன் வாக்குமூலத்தினை வைத்து பொலிசார் பார்வதியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top