யாழ்ப்பாணம், கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் கெரவலபிட்டி, வத்தளை, ஹேகித்த, பள்ளியாவத்தை தெற்கு, கெரங்கப்புகுன, கலுதுபிட மற்றும் மத்துமஹல ஆகிய கிராம சேவர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொட தெற்கு கிராம சேவகர் பிரிவின் விஜித மாவத்தை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவின் வித்யாசார கிராம சேவகர் பிரிவிலுள்ள போசிறிபுர பகுதியும் மஹா வஸ்கடுவ வடக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மத்துகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டதொலுவத்தை மேற்கு கிராம சேவகர் பிரிவின் கொரட்டுஹேன கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் மத்திய மற்றும் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களின் 8 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவன்திடிய மற்றும் மாம்பே கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவ்வல மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

காலி மாவட்டத்தின் ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கலை 1, கொக்கலை 2, மீகாகொடை, மலியகொட மற்றும் பியதிகம மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குருணாகல் மாவட்டத்தின் குலியாப்பிட்டிய பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட 82 கிராம சேவகர் பிரிவுகளில் 19 கிராம சேவர்கள் தவிர்ந்த 63 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குலியாப்பிட்டிய நகரம், அஸ்ஸெத்தும, மீகஹாகொட்டுவ, திக்ஹெர, தீகல்ல, கபலேவ, கிரிந்தவ, அனுக்கனே, மேல் கலுகமுவ, வெரலுகம, தப்போமுல்ல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தண்டகமுவ, கிழக்கு மற்றும் மேற்கு, மடகும்புருமுல்ல, மேல் வீராம்புவ, கீழ் வீராம்புவ, கொன்கஹாகெதர, துன்மோதர, கெட்டவலகெதர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் உகன பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட குமாரிகம கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top