இலங்கையில் திரிபடைந்த வீரியமிக்க கோவிட் வைரஸ் பரவுவதனால் குறைந்தபட்சம் ஒரு மாத காலம் அத்தியாவசிய பயணங்களை தவிர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


முடிந்தளவு வீட்டில் இருந்து நேரத்தை செலவிடுமாறு, கோவிட் வைரஸ் திரிபு தொடர்பில் ஆய்வு நடத்தும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்த வீரியமிக்க கோவிட் வைரஸ் மரபணு தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் அது சமூக மட்டத்தில் பரவவில்லை என நினைக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் பிரித்தானிய வைரஸ் மிகவும் வேகமாக பரவும் மரபணுக்கள் எனவும், பிரித்தானிய மரபணுவில் ஆபத்துக்கள் அதிகம் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வளவு வீரியமிக்க வைரஸ் பரவினால் அது உடலுக்குள் வரவிடாமல் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு மக்களுடையதென அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top