நாடளாவிய ரீதியில் நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த பயணத்தடை 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்டதை போன்று இந்த நடமாட்ட கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேற முடியாது எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

பயணத்தடை காரணமாக நாளைமுதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் பேலியகொடை மெனிங் சந்தை ஆகியவற்றையும் மீளத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அவற்றை மீண்டும் 2 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top