திருகோணமலை- இறக்ககண்டி பகுதியில் சட்டவிரோத வெடி பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்களை விஷேட பொலிஸ் அதிரடி படையினர் கைதுசெய்து குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத வெடி பொருட்களை  வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்து சந்தேக நபர்களின் வீடுகளை சோதனையிட்டபோது 85 ஜெலட்னைட்  கூறுகள் கைப்பற்றப்பட்டதாகவும் இவ்வெடி பொருட்களை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேகநபர்களை இன்று (27) அதிகாலை 5.00 மணியளவில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை- இறக்கக்கண்டி, வாலையூற்று பகுதியைச் சேர்ந்த முஹம்மது இப்ராஹீம் இமானுவல் ஹுஸைன் (38வயது) மற்றும்  அதே இடத்தைச் சேர்ந்த ஆப்தீன் அஸீம் (35வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தவெடி பொருட்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. திருகோணமலை- இறக்ககண்டி பகுதியில் சட்டவிரோத வெடி பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்களை விஷேட பொலிஸ் அதிரடி படையினர் கைதுசெய்து குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத வெடி பொருட்களை  வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்து சந்தேக நபர்களின் வீடுகளை சோதனையிட்டபோது 85 ஜெலட்னைட்  கூறுகள் கைப்பற்றப்பட்டதாகவும் இவ்வெடி பொருட்களை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேகநபர்களை இன்று (27) அதிகாலை 5.00 மணியளவில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை- இறக்கக்கண்டி, வாலையூற்று பகுதியைச் சேர்ந்த முஹம்மது இப்ராஹீம் இமானுவல் ஹுஸைன் (38வயது) மற்றும்  அதே இடத்தைச் சேர்ந்த ஆப்தீன் அஸீம் (35வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தவெடி பொருட்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top